அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வருகிறது

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வர உள்ளது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வருகிறது
Published on

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு (2020) தொடக்கத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 20 ஓவர் தொடரில் விளையாட இருந்தது. ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்திருப்பதால் ஜிம்பாப்வேக்கு பதிலாக இலங்கை அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது.

இந்தியாவின் அழைப்பை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டது. இதன்படி இலங்கை அணி ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வந்து மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் கவுகாத்தி (ஜன.5), இந்தூர் (ஜன.7), புனே (ஜன.10) ஆகிய இடங்களில் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com