டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணிகளால் கோப்பையை வெல்லமுடியாத நிலை... தொடரும் வரலாறு

டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணிகள் கோப்பையை வென்றதில்லை என்ற வரலாறு தொடர்ந்து வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணிகளால் கோப்பையை வெல்லமுடியாத நிலை... தொடரும் வரலாறு
Published on

 மெல்போர்ன்,

கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் முதலில் நடைபெற்றது. அதில் தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்க அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

2009ம் ஆண்டு இங்கிலாந்தில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் 2010 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. அதில் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி குரூப் சுற்றுடன் வெளியேறிய நிலையில், இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

2021 டி20 உலகக்கோப்பை தொடர் இலங்கையில் நடைபெற்றது. அதில் இலங்கை இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்தது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

2014ல் டி20 உலகக்கோப்பை தொடரை நடத்திய வங்காளதேசம் லீக் சுற்றுடன் நடையை கட்ட, அதில் இலங்கை அணி சாம்பியன் ஆனது.

2016 டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அரையிறுதி வரை சென்று வாய்ப்பை தவறவிட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.

இதையடுத்து 2021ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகமும், ஓமனும் இணைந்து உலகக்கோப்பை டி20 தொடரை நடத்தின. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் தகுதிச்சுற்றுக்கு கூட தகுதிபெறவில்லை. ஓமனோ தகுதிச்சுற்றை தாண்டவில்லை. அதில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.

இம்முறை டி20 உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலியா நடத்திவரும் நிலையில், அந்த அணி தற்போது குரூப் சுற்றுடன் நடையை கட்டியது. இதனால், போட்டியை நடத்தும் அணி கோப்பையை வெல்ல முடியாமல் போகும் வரலாறு இம்முறையும் தொடர்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com