இந்திய அணியின் 13 ஆண்டு கால வெற்றி பயணம் முடிவுக்கு வந்த சோகம்


இந்திய அணியின் 13 ஆண்டு கால வெற்றி பயணம் முடிவுக்கு வந்த சோகம்
x

மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

மெல்போர்ன்,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. 'பாக்சிங் டே' என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் எடுத்தன. 105 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இந்தியாவுக்கு 340 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 79.1 ஓவர்களில் 155 ரன்களில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தன. 3-வது டெஸ்ட் மழையால் டிராவானது.

மெல்போர்னில் 13 ஆண்டுக்கு பிறகு இந்தியா சந்தித்த முதல் தோல்வியாகும். இதற்கு முன்னர் இந்திய அணி இங்கு கடைசியாக ஆடிய 3 டெஸ்டுகளில் 2-ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் கண்டிருந்தது.

மெல்போர்னில் இந்தியாவின் 13 ஆண்டு கால வெற்றி பயணம் முடிவுக்கு வந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story