பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்பீரை நீக்கும் திட்டமில்லை - பிசிசிஐ துணைத்தலைவர்


பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்பீரை நீக்கும் திட்டமில்லை - பிசிசிஐ துணைத்தலைவர்
x

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார்.

டெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவரது பயிற்சியின்கீழ் டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியா படுதோல்வியடைந்தது. இதனால், டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்பீரை நீக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின . டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்பீரை நீக்கும் திட்டமில்லை என்று பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறித்து செய்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. ஆனால், டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்பீரை நீக்கும் திட்டமில்லை. இது குறித்து பிசிசிஐ தலைவர் தேவஜித்தும் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார்’ என்றார்.

1 More update

Next Story