அடுத்த 'பேப் 5 பேட்ஸ்மேன்கள்' இவர்கள்தான் - வில்லியம்சன் தேர்வு.. யாருக்கெல்லாம் இடம்..?

வில்லியம்சன் தேர்வு செய்ததில் 2 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

வெலிங்டன்,

நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் சுமித், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் பேட்டிங்கில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதனால் அவர்களை பேப் 4 பேட்ஸ்மேன்கள் என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டுவது வழக்கமாகும்.

தற்போது இவர்கள் தங்களது கெரியரின் இறுதி கட்டத்தில் உள்ளனர். இதன் காரணமாக வரும் காலங்களில் இவர்களை போன்று சிறந்த வீரர்களாக யாரெல்லாம் இருப்பார்கள்? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. இது குறித்து பலரும் தங்களது கணிப்பினை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பேப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவரான வில்லியம்சன் தற்சமயத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் வீரர்களை கொண்டு 'பேப் 5' பேட்ஸ்மேன்களை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

அதன்படி, "ஜெய்ஸ்வால், சுப்மன் கில் (இருவரும் இந்தியா), ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), ஹாரி புரூக் (இங்கிலாந்து) மற்றும் கேமரூன் கிரீன் (ஆஸ்திரேலியா" ஆகியோரை தேர்வு செய்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com