

மும்பை,
2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. சஞ்சு சாம்சன் முதல் ஜஸ்பிரித் பும்ரா வரை பல வீரர்கள் அசத்தினர். இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணி 3வது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் கடந்த ஒரு மாதமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தாததும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணம் என தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார்.