”எங்களின் அடுத்த இலக்கு இதுதான்” - சுப்மன் கில்

சிறந்த வீரருக்கான பாலி உம்ரிகா் விருது இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது.
”எங்களின் அடுத்த இலக்கு இதுதான்” - சுப்மன் கில்
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) 2026-ம் ஆண்டுக்கான நமன் விருதுகள் நேற்று வழங்கப்பட்டது. 2024-25 காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டவா்கள் 2026-ம் ஆண்டு விருதுப் பட்டியலில் இடம் பிடித்தனா். இதில், சிறந்த வீரருக்கான பாலி உம்ரிகா் விருது இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. அவா் இந்த விருதை 2-வது முறையாக கைப்பற்றினார்.

அப்போது சுப்மன் கில் பேசியதாவது; கடந்த முறை இந்தியாவில் கோப்பைக்கு மிக நெருக்கமாக இருந்தோம். தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைப்பது எங்களுக்கு ஒரு சிறந்த சூழ்நிலை. எந்தவொரு வடிவத்திலும் நாட்டிற்காக உலகக் கோப்பையை வெல்வதுதான் எங்களின் இறுதி இலக்கு. இந்த எண்ணம் எப்போதும் எனக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது.” இவ்வாறு சுப்மன்கில் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com