

சிட்னி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே,கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற போது திடீ ரென மாரடைப்பு ஏற்பட்டு தனது 52-வயது வய தில் மரணம் அடைந்தார். அவரது மறைவு கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் 4 ஆண்டுக்கு பிறகு அவரது மரணத் துக்கான காரணத்தை அவரது மகன் ஜாக்சன் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகை யில் 'எனது தந்தையின் மரணத்துக்கு நிச்சய மாக கொரோனா தடுப்பூசியின் பங்கு உண்டு என்று நம்புகிறேன். இப்படி சொல்வதால் இனி சர்ச்சை ஏற்படும் என்று நினைக்கவில்லை.
அவருக்கு ஏற்கனவே சில உடல்நலப்பிரச்சினை கள் இருந்தன. என்றாலும் கூட கொரோனா தடுப்பூசி தான் பாதிப்பை தீவிரப்படுத்தி விட் டது. இந்த விஷயம் எப்போதும் மனதை வாட்டி வதைக்கிறது.
தந்தையின் மரணச்செய்தியை தொலைபேசியில் கேட்டதும், உடனடியாக ஆஸ்திரேலிய அரசாங்கத்தையும், கொரோனா மற்றும் தடுப்பூசியையும் தான் குற்றம் சாட்டினேன். எனது தந்தைக்கு மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலும் நல்ல நிலையிலேயே காணப்பட்டார். மகிழ்ச்சியு டன் வாழ்க்கையை கழித்தார். அவர் 3 அல்லது 4 கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பார் என நினைக்கிறேன். அவற்றை எடுத்துக் கொள்ள அவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் வேலை நிமித்தமாக மற்றவர் களை போலவே அவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தப் பட்டார். இந்த விஷயத்தை பற்றி நான் அதிகமாக சிந்திப்பதை தவிர்க்க முயற்சிக்கிறேன். ஏனெனில் அது பற்றி நினைத்தாலே கோபம் தான் உண்டாகிறது.' என்றார்.