பெங்களூரு அணியை வீழ்த்தி நாங்கள் பெற்ற வெற்றிக்கு இதுதான் காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

இந்த போட்டியில் எங்களது வீரர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

பெங்களூரு,

ஐ.பி.எல் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் ஆர்.பி.சி - கே.கே. ஆர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நரைன், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதிரடியின் மூலம் 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் கூறியதாவது, பெங்களூரு அணியை வீழ்த்தி நாங்கள் பெற்ற வெற்றிக்கு காரணம் என்னவென்றால் நாங்கள் இங்கு (பெங்களூரு) வந்ததுமே இரண்டு செஷன்கள் பயிற்சி செய்தோம். அந்த பயிற்சியிலேயே மிகச் சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டது.

அதோடு கடந்த போட்டியிலும் நாங்கள் நல்ல முறையில் விளையாடியதால் இந்த போட்டியில் அந்த தன்னம்பிக்கை உதவியது. இந்த மைதானத்தில் வந்ததுமே பந்துகளை அடிக்க முடிந்தது. ரசல் இந்த போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை கைப்பற்றியதால் மற்ற பவுலர்களுக்கும் அது உதவியாக இருந்தது.

இந்த மைதானத்தின் சூழ்நிலை சரியாக கனித்து அதற்கேற்றார் போல் அவர் பந்துகளை வீசினார். அதேபோன்று நரேனும் இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்திருந்தார். அவருக்கு பேட்டிங்கில் என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும். அந்த வகையில் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தார்.

இந்த போட்டியில் எங்களது வீரர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன். இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது மிகவும் எளிமையாக இருந்தது. மைதானம் இருவேக தன்மையுடன் இருந்தாலும் பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது. இதுபோன்ற ஒரு துவக்கத்தை தான் இந்த தொடரில் எதிர்பார்த்தோம். இனிவரும் போட்டிகளிலும் நாங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com