நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு காரணம் இது தான்...கேஷவ் மகாராஜ்

நியூசிலாந்து தரப்பில் பெர்குசன், பென் சியர்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு காரணம் இது தான்...கேஷவ் மகாராஜ்
Published on

ஹாமில்டன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையே இன்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் மல்டர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது.

இதனை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் ஜார்ஜ் லிண்டே மட்டும் 33 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 15.3 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி 68ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நியூசிலாந்து தரப்பில் பெர்குசன், பென் சியர்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த நிலையில், தோல்வி தொடர்பாக பேசிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் கேஷவ் மகாராஜ் கூறியதாவது,

பேட்டிங்கில் தடுமாறினோம். மைதானத்தில் பனி இருந்தது, ஆனால் விக்கெட் இன்னும் கொஞ்சம் மோசமாகிவிட்டது, ஆனால் நியூசிலாந்து பந்துவீசிய விதம், தொடக்கத்தில் எங்களுக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்காமல், எங்களை மிகவும் திணறடித்து, மிகவும் கடினமான விக்கெட்டில் நாங்கள் ஆட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஒரு வேகப்பந்து வீச்சுப் பிரிவாக, கடந்த இரண்டு ஆட்டங்களில் வீரர்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். மிகவும் துல்லியமாகப் பந்துவீசி, தேவைப்பட்டபோது சிறப்பாக மீண்டு வந்தனர். மேலும், ஆட்டத்தின் பிற்பகுதியில் ஜார்ஜ் சில அற்புதமான ஷாட்களை அடித்து, அணியை ஓரளவு மீட்டெடுத்தார். நாங்கள் மீண்டும் சிறப்பாக செயல்படுவோம். என் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com