

ஐதராபாத்,
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது;
சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் பவர்பிளேயில் பேட்டிங் செய்ததை பார்க்கையில், சுமார் 220 அல்லது 230 ரன்களை எதிர்பார்த்தேன். ஆனால் 30 ரன்களைக் குறைத்தது ஒரு சிறந்த பந்துவீச்சு முயற்சி. இந்த மாதிரியான மைதானத்தில், இந்த மாதிரியான பிட்சில், எந்த நாளிலும் நான் 200 ரன்களுக்கும் குறைவான இலக்கை ஏற்று கொண்டிருப்பேன். ஒரு கட்டத்தில், தேவைப்படும் ரன் விகிதம் 8 ஆக குறைந்திருந்தது. மேலும் 6 விக்கெட்டுகள் கையில் இருந்தன. 10 ஓவர்களில் சுமார் 84 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
அதன்பிறகு, ஓரிரு பார்ட்னர்ஷிப்களை உருவாக்குவதும், எதிரணியினர் ஆட்டத்தில் இல்லாதவாறும், அழுத்தத்தில் இல்லாதவாறும் பார்த்து கொள்வதுதான் முக்கியமாக இருந்தது. ஆனால், அதற்குப் பிறகான ஓரிரு ஓவர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டன. 10 ஓவர்கள் முடிந்த பிறகு, அடுத்த 2 ஓவர்களில் நாங்கள் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தோம். எனவே, அது அவர்களுக்கு மிகவும் உதவியது என்று நினைக்கிறேன். அதில் இருந்துதான் உத்வேகம் மாறத்தொடங்கியது.
டெத் ஓவர்களில் ஓவருக்கு 12 அல்லது 13 ரன்களைத் துரத்துவது கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். அதனால், ஐதராபாத் அணியினரை பாராட்ட வேண்டும். அவர்கள் இறுதிகட்டத்தில் மிகச்சிறப்பாகப் பந்து வீசினார்கள்.
இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.