சச்சின் தெண்டுல்கருடனான சந்திப்பு மிகவும் சிறப்பானது - டேவிட் பெக்காம்

உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தை பிரபல முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் நேரில் கண்டுகளித்தார்.
image courtesy; twitter/ @ICC
image courtesy; twitter/ @ICC
Published on

மும்பை,

உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தை நேரில் காண பல திரைப்பிரபலங்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் வருகை தந்திருந்தனர்.

அதில் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காமும் ஒருவர். அவர் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருடன் இணைந்து இந்த ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார். மேலும் மைதானத்தில் இரு அணி வீரர்களையும் நேரில் சந்தித்தார்.

இந்நிலையில் சச்சின் தெண்டுல்கருடனான இந்த சந்திப்பு மிகவும் சிறப்பானது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர்  " இது மிகவும் சிறப்பு வாய்ந்தது, விம்பிள்டனில் நான் முதன்முறையாக சச்சினை சந்தித்தேன், அவரை சந்தித்தது சிறப்பு, அவர் சிறந்தவர், ஆனால் ஒரு வீரராக அவர் இன்னும் சிறந்தவர். அவருடன் நேரத்தை செலவிடுவது எனக்கு சிறப்பானது. அவரது வீட்டில் அவருடன் சிறிது நேரம் செலவிட்டது மிகவும் விசேஷமானது. வீரர்கள் அனைவரும் வந்து வணக்கம் சொல்வது மகிழ்ச்சியாக இருந்தது. அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. ," என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com