

பெங்களூரு,
10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் பெங்களூரு அணி வீரர்கள் அதிரடியாகி விளையாடினர். விராட் கோலி 28 ரன்களும் , பில் சால்ட் 46 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் படிக்கல் அதிரடியாக அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.தொடர்ந்து ரஜத் படிதார் , டிம் டேவிட் இருவரும் பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்க விட்டனர். வான வேடிக்கை காட்டிய இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
டிம் டேவிட் அரைசதம் அடித்து 70 ரன்கள் எடுத்தார். படிதார் 48 ரன்கள் எடுத்தார்.
இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்தது.