சென்னை - ஐதராபாத் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

Image : PTI
5 தோல்விகளுக்கு பிறகு தோனி தலைமையில் மீண்டும் சென்னை வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.
மும்பை ,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி மற்றும் 2 வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறி வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற எதிர்வரும் போட்டிகளில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற சூழலில் விளையாட உள்ளது.சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் விலகிய நிலையில் கேப்டன் பொறுப்பை மகேந்திரசிங் தோனி மீண்டும் ஏற்றுள்ளார். தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்கு பிறகு தோனி தலைமையில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.
இன்று இரவு நடைபெற உள்ள போட்டியில் சென்னை அணி , மும்பை அணியுடன் மோதுகிறது. தொடர்ந்து வரும் 25ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை அணி , ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.
இந்த நிலையில், சென்னை - ஐதராபாத் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை காலை 10:15க்கு ஆன்லைனில் தொடங்குகிறது .






