சென்னை-ஐதராபாத் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை தொடங்குகிறது.
சென்னை-ஐதராபாத் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
Published on

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 18-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை (வியாழக்கிழமை) பகல் 12.15 மணிக்கு தொடங்குகிறது. ரூ.2,000, ரூ.3,500, ரூ.4,000, ரூ.4,700, ரூ.8,000 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

www.chennaisuperkings.com சிஎஸ்கே செயலி மற்றும் www.district.in ஆகிய இணைய தளம் மூலம் டிக்கெட்டுகளை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஒருவருக்கு அதிகபட்சமாக 4 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com