

சென்னை,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸ் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 18.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்து. இதன் மூலம் சென்னையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றிபெற்றது.
முன்னதாக ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை அணி தோல்வியடைந்தது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் 11ம் தேதி நடக்கவுள்ள சென்னை அணி டெல்லியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்விற்பனை 6ம் தேதி தொடங்குகிறது.
14ம் தேதி சேப்பாக்கத்தில் சென்னை அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்விற்பனை 7ம் தேதி தொடங்குகிறது.