உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு தொடக்கம்..!

உலகக்கோப்பை தொடருக்கான அரையிறுதிப்போட்டி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது .
உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு தொடக்கம்..!
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணிகளும் உலகக்கோப்பை தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை கடந்த மாத இறுதியில் தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களில் நடைபெற்றது. உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது .

மும்பை , கொல்கத்தாவில் அரையிறுதிப்போட்டியும் , அகமதாபாத்தில் இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளன . https://tickets.cricketworldcup.com என்ற இணைய தளத்தில் டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com