பிளே ஆப் சுற்றுக்கு செல்ல கடும் போட்டி: எந்த அணிகளுக்கு அதிக வாய்ப்பு ?

8 அணிகளுக்கு இடையே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல கடும் போட்டி நிலவுகிறது.
பிளே ஆப் சுற்றுக்கு செல்ல கடும் போட்டி: எந்த அணிகளுக்கு அதிக வாய்ப்பு ?
Published on

மும்பை,

9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிக ளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

' 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 8-9 வெற்றிகள் தேவையாகும். இன்னும் எந்த அணியும் 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்யவில்லை.

மும்பை, லக்னோ அணிகள் பிளே ஆப் சுற்று வாய்ப்புகளில் இருந்து வெளியேறியது.இதனால் 8 அணிகளுக்கு இடையே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், எந்த அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளை பார்க்கலாம்,

பெங்களுரு அணி: 99 சதவீத வாய்ப்பு உள்ளது - ( 8 வெற்றி , 4 தோல்வி).

குஜராத் அணி: 99 சதவீத வாய்ப்பு உள்ளது - ( 8 வெற்றி , 4 தோல்வி).

ஐதராபாத் அணி: 85 சதவீத வாய்ப்பு உள்ளது - ( 7 வெற்றி , 5 தோல்வி).

பஞ்சாப் அணி: 50 சதவீத வாய்ப்பு உள்ளது - ( 6 வெற்றி , 5 தோல்வி).

ராஜஸ்தான் அணி: 48 சதவீத வாய்ப்பு உள்ளது - ( 6 வெற்றி , 5 தோல்வி).

சென்னை அணி: 17 சதவீத வாய்ப்பு உள்ளது - ( 6 வெற்றி , 6 தோல்வி).

கொல்கத்தா அணி: 2 சதவீத வாய்ப்பு உள்ளது - ( 4 வெற்றி , 6 தோல்வி).

டெல்லி அணி: 0.4 சதவீத வாய்ப்பு உள்ளது - ( 5 வெற்றி , 7 தோல்வி).

X

Daily Thanthi
www.dailythanthi.com