அபராத நடவடிக்கையில் சிக்கிய டிம் டேவிட்

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18 ரன் வித்தியாசத் தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது.
அபராத நடவடிக்கையில் சிக்கிய டிம் டேவிட்
Published on

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18 ரன் வித்தியாசத் தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. இதில் பில் சால்ட் (78 ரன்), விராட் கோலி (50 ரன்), கேப்டன் ரஜத் படிதார் (53 ரன்) ஆகியோரது அரைசதங்களின் உதவியுடன் பெங்களூரு நிர்ணயித்த 241 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 222 ரன்களில் அடங்கி யது.

இந்த நிலையில் பெங்களூரு அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் அபராத நடவடிக்கையில் சிக்கினார். இந்த ஆட்டத்தில் 18-வது ஓவரின் போது, பந்து ஈரமானதால் அது மாற்றப்பட்டது. ஆனால் மாற்றப்பட்ட புதிய பந் தின் தரத்தை பற்றி சந்தேகப்பட்ட டிம் டேவிட் அதை தனது கையில் வைத்து பரிசோதித்துக் கொண்டிருந்தார். ஆட்டத்தை தொடங்குவதற்கு பந்தை தரும்படி நடுவர்கள் கேட்ட போது. உடனடியாக கொடுக்க மறுத்த டிம் டேவிட் அதை கையில் வைத்து சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் நடுவர்கள் கோமடைந்தனர். ஒரு பேட்டராக பந்தின் தன்மையை ஆய்வு செய்ய அவருக்கு அனுமதி இல்லை. வீரர்க ளின் நடத்தை விதியை மீறிய அவருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீ தம் அபராதமும், ஒரு பகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com