

ஹூப்ளி,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடகா- ஜம்மு காஷ்மீர் அணிகள் இடை யிலான இறுதி ஆட்டம் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்று வருகிறது.இதில் முதலில் பேட் செய்த ஜம்மு-காஷ்மீர் அணி 584 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழ்ந்தது.
தொடர்ந்து கர்நாடகா அணி 93.3 ஓவரில் 293 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஜம்மு அணி 291 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகிப் நபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த போட்டியின் கடைசி நாளில் ஜம்மு காஷ்மீர் அணி விளையாடி வருகிறது.இதனால் கடைசி நாளில் ஜம்மு-காஷ்மீர் அணிக்கே வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஜம்மு-காஷ்மீர் முதல் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஜம்மு காஷ்மீர் அணி ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது மிகப்பெரிய தருணம். இதற்கு முன்பு எங்களால் இந்த நிலையை எட்ட முடியாது என்று பலர் கூறினர். ஆனால், முதல் இன்னிங்ஸில் வீரர்கள் விளையாடிய விதம், நாம் கண்டிப்பாகக் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
எங்கள் வீரர்கள் இந்திய தேசிய அணிக்காக விளையாட அழைக்கப்பட வேண்டிய அல்லது கேட்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். தற்போதைய அணியில் இருக்கும் வீரர்களில் ஒருவர் அல்லது இருவர் நிச்சயமாக இந்திய ஜெர்சியை அணியத் தகுதியானவர்கள்.என்று அவர் கூறினார்.