

சென்னை,
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெ தொடர் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கடந்த ஆண்டு கொரோனா காரணமாக டிஎன்பிஎல் கிரிக்கெட் நடைபெறவில்லை.
இந்நிலையில், டிஎன்பிஎல் 5-வது சீசன் வரும் ஜூன் 4-ம் தேதி தொடங்க உள்ளது. ஜூன் 4-ம் தேதி தொடங்கி ஜூலை 4-ம் தேதி வரை ஒரு மாதம் டி20 போட்டிகளை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இன்று அனுமதி வழங்கியுள்ளது. டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தமிழக அரசும் அனுமதி வழங்கியுள்ளது.
2021 டிஎன்பிஎல் டி20 தொடருக்கான போட்டிகள் திருநெல்வேலி, கோவை, சேலம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சர்வதேச போட்டிகள், ஐபிஎல் ஆகியவற்றில் பின்பற்றப்படும் பயோ பபுள் முறை உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து கடுமையாக பின்பற்றப்பட்டே பாதுகாப்பான முறையில் டிஎன்பிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.