டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சியை சாய்த்தது திண்டுக்கல்

8 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் சந்தித்தன. முதலில் பேட் செய்த திருச்சி வாரியர்ஸ் 5 விக்கெட்டுக்கு 145 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சியை சாய்த்தது திண்டுக்கல்
Published on

அடுத்து களம் இறங்கிய திண்டுக்கல் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பதிவு செய்தது. கேப்டன் ஹரிநிஷாந்த் (38 ரன்), மோகித் ஹரிகரன் (41 ரன்) வெற்றிக்கு வித்திட்டனர்.

இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 3.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, சேலம் ஸ்பார்டன்சை எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com