டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2-வது வெற்றி - காரைக்குடி காளையை வீழ்த்தியது

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் காரைக்குடி காளையை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2-வது வெற்றி - காரைக்குடி காளையை வீழ்த்தியது
Published on

நெல்லை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நெல்லையில் அரங்கேறிய 9-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, காரைக்குடி காளையுடன் மோதியது.

இதில் டாஸ் ஜெயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். முதல் 2 ஆட்டங்களில் கவுசிக் காந்தி சொதப்பியதால் இந்த முறை தொடக்க ஆட்டக்காரர்களாக கங்கா ஸ்ரீதர் ராஜூவும், கோபிநாத்தும் களம் புகுந்தனர். சில ஓவர்கள் நிதானத்தை கடைபிடித்த இவர்கள் அதன் பிறகு அதிரடியை காட்டினர். யோமகேசின் ஓவரில் கங்கா ஸ்ரீதர் ராஜூ ஹாட்ரிக் பவுண்டரி ஓடவிட்டார். இன்னொரு பக்கம் சுவாமிநாதன், மோகன் பிரசாத்தின் ஓவர்களில் கோபிநாத் சிக்சர் தூக்கி உற்சாகப்படுத்தினார்.

இவர்கள் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். 10.2 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 100 ரன்களை தொட்டது.

வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த இந்த கூட்டணி ஸ்கோர் 108 ரன்களை எட்டிய போது பிரிந்தது. கங்கா ஸ்ரீதர் ராஜூ 54 ரன்களில் (38 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அவரை போன்று அரைசதம் அடித்த கோபிநாத் 55 ரன்களில் (40 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். இதற்கிடையே 2-வது விக்கெட்டுக்கு வந்த கேப்டன் கவுசிக் காந்தியும் துரிதமாக ரன்களை சேகரித்தார்.

ஒரு கட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 190 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது. ஆனால் கடைசி 3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் எதிர்பார்த்ததை விட ஸ்கோர் கொஞ்சம் குறைந்து போனது. இதில் கவுசிக் காந்தி 32 ரன்களில் (21 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனதும் அடங்கும்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது.

போட்டியை நேரில் கண்டுகளித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன்

அடுத்த 176 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களம் கண்ட காரைக்குடி அணிக்கு, கில்லீஸ் வேகப்பந்து வீச்சாளர் பெரியசாமி செக் வைத்தார். அவரது பந்து வீச்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆதித்யா (2 ரன்), கேப்டன் அனிருதா (12 ரன்) இருவரும் காலியானார்கள். அடுத்து கவின் (4 ரன்), பாப்னா (2 ரன்) ஆகியோர் ரன்-அவுட் ஆக 29 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து காரைக்குடி அணி தள்ளாடியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com