டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேலம் அணிக்கு எதிராக நெல்லை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சேலம் அணிக்கு எதிரான இன்றைய டி.என்.பி.எல். லீக் ஆட்டத்தில் நெல்லை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேலம் அணிக்கு எதிராக நெல்லை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Published on

சென்னை,

தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 23-வது லீக் ஆட்டம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியுடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி மோதியது.

இதில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சேலம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அக்ஷய் ஸ்ரீனிவாசன்(2) மற்றும் கோபிநாத்(3) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அடுத்து வந்த விஜய் சங்கர் சற்று நிதானமாக ஆடி, 35 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்த நிலையில் கேட்ச் ஆனார். அபிஷேக் 25 ரன்களில் பவுல்ட் ஆகி வெளியேறினார். இதன் பின் வந்தவர்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, சேலம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 121 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாபா அபராஜித், 3 பவுண்டர்கள், 1 சிக்சர் விளாசி 38 ரன்கள் சேர்த்த நிலையில் கணேஷ் மூர்த்தியின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சூர்யபிரகாஷ் 9 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்தாக கூட்டணி சேர்ந்த ரஞ்சன் பவுல்(23) மற்றும் சஞ்சய் யாதவ்(41) இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நிலைத்து நின்று ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதையடுத்து நெல்லை அணி 18.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நெல்ல அணியின் கேப்டன் பாபா அபராஜித், ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com