டி.என்.பி.எல். கிரிக்கெட்: நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு 166 ரன்கள் வெற்றி இலக்கு

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெல்லை அணிக்கு 166 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்: நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு 166 ரன்கள் வெற்றி இலக்கு
Published on

சென்னை,

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று மாலை தொடங்கியது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

துவக்க வீரர்களாக கேப்டன் கவுசிக், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் களமிறங்கினர். கேப்டன் கவுசிக் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுஜய் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரரான ஜெகதீசன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 95 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக அவர் ஆட்டமிழந்தார்.

பின்னர் 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், மோகன் அபினவ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணியின் சார்பில் கேப்டன் அபராஜித் மற்றும் சூர்யபிரகாஷ் ஆகியோர் களமிறங்கினர். அதில் சூர்யபிரகாஷ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ரஞ்சன் பால் களமிறங்கி விளையாடி வருகிறார்.

தற்போது நெல்லை அணி 13 ஒவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 91 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com