டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்று: திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி


டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்று: திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி
x

image courtesy: TNPL twitter

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது.

திண்டுக்கல்

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில் இன்று வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக வசீம் அகமது மற்றும் சுரேஷ் குமார் களம் இறங்கினர். இதில் வசீம் அகமது 36 ரன்களும், சுரேஷ் குமார் 23 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய கவுசிக் 9 ரன்களிலும், சஞ்சய் யாதவ் 1 ரன்னிலும், ராஜ்குமார் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து முகிலேஷ் மற்றும் ஜாபர் ஜமால் ஜோடி சேர்ந்தனர். இதில் முகிலேஷ் 12 ரன்களில் அவுட்டானார். இறுதியில் திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் அணி சார்பில் அஸ்வின் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது.

அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அஸ்வின் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷிவம் சிங் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் 16.4 ஓவர்களில் திண்டுக்கல் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி திருச்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பாபா இந்திரஜித் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

1 More update

Next Story