டிஎன்பிஎல்: சேலம் அணிக்கு 165 ரன்கள் நிர்ணயித்த மதுரை

தொடர்ந்து 165 ரன்கள் இலக்குடன் சேலம் அணி விளையாடுகிறது.
டிஎன்பிஎல்: சேலம் அணிக்கு 165 ரன்கள் நிர்ணயித்த மதுரை
Published on

கோவை,

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர், கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.இந்த தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சேலம் அணியின் கேப்டன் அபிஷேக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் ராம் அரவிந்த், பாலசந்தர் அனிருத் இருவரும் சிறப்பாக விளையாடினர் . அனிருத் 23 ரன்களிலும், ராம் அரவிந்த்37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் . தொடர்ந்து .சதுர்வேத், அதீக் உர் ரஹ்மான் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர் .பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது . தொடர்ந்து 165 ரன்கள் இலக்குடன் சேலம் அணி விளையாயிடுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com