டிஎன்பிஎல்: திருச்சி அணிக்கு எதிராக நெல்லை பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார் .
கோவை,
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நெல்லை, சேலம், திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் நடக்கிறது. இதன் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.இதில் தற்போது வரை 2 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் 3வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார் . அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
Related Tags :
Next Story






