டி.என்.பி.எல் : திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் நெல்லை அணி பந்துவீச்சு தேர்வு

திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
Image Tweeted By @TNPremierLeague
Image Tweeted By @TNPremierLeague
Published on

கோவை,

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று கோவையில் அடுத்த கட்ட லீக் போட்டிகள் தொடங்குகின்றன. அந்த வகையில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகிறது. இன்று 3.15 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் நெல்லை அணியை திருப்பூர் அணி எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

திருப்பூர் அணி (விளையாடும் லெவன்): எஸ் சித்தார்த், சுப்ரமணியன் ஆனந்த், பி பிரான்சிஸ் ரோகின்ஸ், எஸ் அரவிந்த், மான் பாஃப்னா, துஷார் ரஹேஜா, அல்லிராஜ் கருப்புசாமி, எம் முகமது, அஸ்வின் கிறிஸ்ட், கே கௌதம் தாமரை கண்ணன், எஸ் மோகன் பிரசாத்

நெல்லை ராயல் கிங்ஸ் : சூர்யபிரகாஷ், எம் ரூபன் ராஜ், பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், பாபா இந்திரஜித், ஜி அஜிதேஷ், ஜிதேந்திர குமார், எம் ஷாஜகான், என்எஸ் ஹரீஷ், வி அதிசயராஜ் டேவிட்சன், கே ஈஸ்வரன்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com