டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு
Published on

நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் காரைக்குடி காளை அணிகளுக்கு இடையேயான 9-வது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அடுத்த ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை 41 ரன்கள் வித்தியாசத்தில் பதம் பார்த்தது.

காரைக்குடி காளை அணி தனது தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவர் வரை போராடி திருச்சி வாரியர்சை வென்றது. 2-வது ஆட்டத்தில் காஞ்சி வீரன்சுக்கு எதிராக வெறும் 67 ரன்னில் சுருண்டது.

ஏறக்குறைய சமபலம் வாய்ந்த இரு அணிகளும் 2-வது வெற்றிக்கு வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com