டி.என்.பி.எல் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் திருப்பூர் அணி பந்துவீச்சு தேர்வு

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உறுதி செய்து விடும்.
Image Courtesy : Twitter @TNPremierLeague
Image Courtesy : Twitter @TNPremierLeague
Published on

சேலம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. தற்போது கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடக்கிறது. இன்று நடக்கும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. கவுசிக்காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உறுதி செய்து விடும்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (விளையாடும் லெவன்): கௌசிக் காந்தி, என் ஜெகதீசன், சோனு யாதவ், உத்திரசாமி சசிதேவ், ராஜகோபால் சதீஷ், எஸ் ராதாகிருஷ்ணன், எஸ் ஹரிஷ் குமார், மணிமாறன் சித்தார்த், சந்தீப் வாரியர், ஆர் அலெக்சாண்டர், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர்

ஐட்ரீம் திருப்பூர் தமிழர்கள் (விளையாடும் லெவன்): எஸ் அரவிந்த், ஸ்ரீகாந்த் அனிருதா, ஆர் ராஜ்குமார், பி பிரான்சிஸ் ரோகின்ஸ், மான் பாஃப்னா, துஷார் ரஹேஜா, சுரேஷ் குமார், எம் முகமது, அஸ்வின் கிறிஸ்ட், எஸ் மோகன் பிரசாத், எஸ் மணிகண்டன்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com