ஐபிஎல் தொடரில் அசத்திய டாப் 5 பேட்ஸ்மேன்கள்,பந்துவீச்சாளர்கள்

பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஐபிஎல் தொடரில் அசத்திய டாப் 5 பேட்ஸ்மேன்கள்,பந்துவீச்சாளர்கள்
Published on

அகமதாபாத்,

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்நிலையில், 2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு -குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இறுதிப்போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 இவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்கி விளையாடியது.

தொடக்கம் முதல் பெங்களூரு வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

இதனால் 18ஓவர்கள் முடிவில் பெங்களூரு 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.விராட் கோலி 75 ரன்கள் எடுத்தார்.இதனால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. பெங்களூரு அணி 2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

இந்த நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் ரன் குவிப்பில் கலக்கிய டாப் 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் விக்கெட் வீழ்த்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள் விவரம் குறித்து பாப்போம். விவரம் வருமாறு,

அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி முதலிடத்தைப் பிடித்தார்.

அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் குஜராத் வீரர் ரபாடா முதலிடம் பிடித்தார்.

அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்:

*சூர்யவன்ஷி (ராஜஸ்தான்) - 776 ரன்கள்

*சுப்மன் கில் (குஜராத்) - 732 ரன்கள்

*சாய் சுதர்சன் (குஜராத்) - 722 ரன்கள்

*விராட் கோலி (பெங்களூரு) - 675 ரன்கள்

*ஹென்ரிச் கிளாசென் (ஐதராபாத்) - 624 ரன்கள்.

அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியல்:

*ககிசோ ரபடா (குஜராத்) - 29 விக்கெட்டுகள்

*புவனேஷ்வர் குமார் (பெங்களூரு) - 28 விக்கெட்டுகள்

**ஜோப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்) - 25 விக்கெட்டுகள்

*ரஷித்கான் (குஜராத்) - 21விக்கெட்டுகள்

*அன்ஜூல் கம்போஜ் (சென்னை) - 21விக்கெட்டுகள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com