போக்குவரத்து ஒப்பந்த மோசடி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மீது வழக்குப்பதிவு

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராஜேஷ் சவுகான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போக்குவரத்து ஒப்பந்த மோசடி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மீது வழக்குப்பதிவு
Published on

மும்பை,

போக்குவரத்து ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.15.01 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராஜேஷ் சவுகான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புகார் தாரர் தின்கர் விஸ்வாமித்ரா தாக்கல் செய்த மனுவின்படி, ராஜேஷ் சவுகான் தன்னை முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரராகவும், முக்கிய தொழிலதிபர்களுடன் நெருங்கிய தொடர்புடையவராகவும் அறிமுகப்படுத்தி அதிக லாபம் கிடைக்கும் என நம்பவைத்து தன்னிடம் மோசடி செய்ததாக விஸ்வாமித்ரா மனுவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் உத்தவிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com