முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியா - இலங்கை ஆட்டம்.. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்
முத்தரப்பு மகளிர் ஒருநாள் தொடர் இலங்கையில் இன்று தொடங்குகிறது.
கொழும்பு,
இலங்கை, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாட்டு மகளிர் அணிகள் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று தொடங்குகிறது. மே 11-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் விளையாடுகின்றன. கொழும்புவில் காலை 10 மணியளவில் இந்த ஆட்டம் தொடங்க இருந்தது.
இந்நிலையில் கொழும்புவில் தற்சமயம் மழை பெய்வதன் காரணமாக இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story








