முத்தரப்பு டி20 கிரிக்கெட்: நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்


முத்தரப்பு டி20 கிரிக்கெட்: நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
x

Image Courtesy: @ZimCricketv

தினத்தந்தி 16 July 2025 6:45 AM IST (Updated: 16 July 2025 6:45 AM IST)
t-max-icont-min-icon

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும்.

ஹராரே,

ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி, ஜிம்பாப்வேயை எளிதில் வீழ்த்தியது. இந்த நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி, வான்டெர் டஸன் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

தென் ஆப்பிரிக்க அணி வெற்றிப்பயணத்தை தொடர முனைப்பு காட்டும். அதேவேளையில் தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

1 More update

Next Story