முத்தரப்பு டி20 தொடர்; தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து இன்று மோதல்

Image Courtesy: @ZimCricketv
தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டன
ஹராரே,
ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டன . இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் 5வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் வெற்றிப்பயணத்தை தொடர இரு அணிகளும் முனைப்பு காட்டும் இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.
Related Tags :
Next Story






