

புதுடெல்லி,
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளை சேர்ந்த 'ஏ' அணிகள் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் அடுத்த மாதம் 9-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய 'ஏ' அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் இடம் ' பெற்று இருந்த ஹர்ஷ் துபே, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து 'ஏ' அணியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் அனுகுல் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.