இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் பவான் ஷா 282 ரன்கள் குவிப்பு

இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரரான பவான் ஷா 282 ரன்கள் குவித்தார்.
இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் பவான் ஷா 282 ரன்கள் குவிப்பு
Published on

ஹம்பன்டோட்டா,

ஹம்பன்டோட்டாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்குட்பட்டோர்) இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 613 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மராட்டியத்தை சேர்ந்த பவான் ஷா 282 ரன்கள் (332 பந்து, 33 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி ரன்அவுட் ஆனார். இளையோர் டெஸ்டில் ஒரு வீரரின் 2வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அவர், கலானா பெரேராவின் ஒரு ஓவரில் 6 பந்துகளையும் பவுண்டரிக்கு ஓடவிட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும். தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் 14 ரன்களில் ரன்அவுட் ஆனார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 2வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com