யு19 உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தான்,இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்


யு19 உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தான்,இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
x

2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

ஜார்ஜியா,

16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது .பிப்ரவரி 7-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

வின்ட்ஹோக்கில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தான்சானியாவை வீழ்த்தியது. தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்ற ஆப்கானிஸ்தான் தனது பிரிவில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு (சூப்பர் 6) முன்னேறியது.

ஹராரேயில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி (சி பிரிவு) 252 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

1 More update

Next Story