ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை!

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நாளை நடைபெற உள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை!
Published on

ஆன்டிகுவா,

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

4 முறை சாம்பியனான இந்திய அணி இந்த தொடரில் சிறந்த பார்மில் உள்ளது. இந்திய அணி தனது காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான வங்கதேசத்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதேவேளை, ஆஸ்திரேலியாவும் தனது காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளும் பலம் வாய்ந்ததாக உள்ளதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. தொடரின் போது சில இந்திய வீரர்கள் கொரானா பாதிப்புக்குள்ளான பிறகு,இந்தப் போட்டிக்கான முழு உடல் தகுதியுடன் இந்தியா அணியும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் அரையிறுதி போட்டி ஆண்டிகுவாவில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com