

சென்னை,
16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் (19 வயதுக்கு உட்பட் டோர்) இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அம்பிரிஷ் இறுதிப்போட்டியில் 3 விக்கெட் உள்பட மொத்தம் 11 விக்கெட்டும், தீபேஷ் 6 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த நிலையில் , இருவருக்கும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2026-இல் கோப்பையை வென்ற நம் இந்திய அணியில், இடம்பெற்று இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களான தம்பிகள் அம்ப்ரிஷ் மற்றும் தீபேஷ் ஆகியோரை இன்று நாம் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தங்களது சிறப்பான திறமையினை வெளிப்படுத்தி வருவது நம் அனைவருக்கும் பெருமை. இந்த இளம் வீரர்களுக்கு நம் திராவிட மாடல் அரசு எல்லா வகையிலும் துணை நிற்கும். என தெரிவித்துள்ளார்.