இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு

தனது உடற்தகுதியை நிரூபித்ததால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஆமதாபாத்,

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இ்ந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இவ்விரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக நாளை ( 24-ந்தேதி) ஆமதாபாத்தில் தொடங்குகிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் ஆமதாபாத்திலேயே (மார்ச் 4-8) நடக்கிறது. கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா தொடரின்போது காயம் அடைந்த உமேஷ் யாதவ் அணியில் இடம்பிடித்தார். 3-வது போட்டிக்குள் உடற்தகுதியை நிரூபித்தால் 3-வது போட்டிக்கான அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் காயம் அடைந்த அவர் உடல் தகுதியை நிரூபித்து இருப்பதால் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com