டெஸ்ட் அணியில் இடம்பெற உம்ரான் மாலிக் தகுதியானவர் - முகமது அசாருதீன் கருத்து..!!

உம்ரான் மாலிக் டெஸ்ட் அணியில் இடம் பெற தகுதியானவர் என முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
Image Courtesy : IPL / BCCI 
Image Courtesy : IPL / BCCI 
Published on

மும்பை,

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளராக அசத்தியவர் உம்ரான் மாலிக். பிரமிக்க வைக்கும் வேகத்தில் பந்துவீசும் இவர் இந்த ஐபிஎல் சீசனில் அதிரடி பேட்டிங் ஜாம்பவான்களுக்கு பந்துவீச்சில் அச்சுறுத்தலாக விளங்கினார்.

தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் இவர் அதிகபட்சமாக இந்த தொடரில் 157 கி.மீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்தார். இவரை இந்திய அணியில் தேர்வு செய்ய கூறி பல முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க 20 ஓவர் தொடருக்கு எதிரான இந்திய அணியில் அவர் இடம்பிடித்தார்.

இந்த நிலையில் உம்ரான் மாலிக் டெஸ்ட் அணியில் இடம் பெற தகுதியானவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "உம்ரான் மாலிக் டெஸ்ட் அணியில் இடம் பெற தகுதியானவர். அவரது பணிச்சுமையை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது, தவறினால் அவர் காயங்களுக்கு ஆளாக நேரிடும். ஒரு எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு தேவைப்படும் ஆதரவு அவருக்கு வழங்கப்படும் என நம்புவதாக" அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com