சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி: டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு

சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்துள்ளது
சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி: டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு
Published on

பர்கிங்ஹாம்,

இங்கிலாந்தில் நடந்து வரும் 8வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை எட்டி விட்டது. பர்மிங்காமில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 2வது அரைஇறுதியில், பி பிரிவில் முதலிடத்தை பிடித்த நடப்பு சாம்பியன் இந்தியா, ஏ பிரிவில் 2வது இடத்தை பெற்ற வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வங்காளதேச அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான யுவராஜ்சிங் இன்று தனது 300-வது போட்டியில் விளையாடுகிறார்.

இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் விவரம் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), யுவராஜ்சிங், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, புவனேஷ்வர்குமார்.

வங்காளதேசம்: தமிம் இக்பால், சவுமியா சர்கார், சபிர் ரகுமான், முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்ஹசன், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், தஸ்கின் அகமது, மோர்தசா (கேப்டன்), ருபெல் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரகுமான்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com