மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூருவுக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்த உ.பி.

டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சை தேர்வு செய்தது.
மும்பை,
5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்று வரும் 5வது லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. நவி மும்பையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, உ.பி. வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் மேக் லென்னிங் , ஹெர்லின் டியோல் களமிறங்கினர்.
லென்னிங் 14 ரன்னிலும், டியோல் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த லிட்ச்பில்ட் 20 ரன்னிலும், கிரன் 5 ரன்னிலும், ஷிராவத் ரன் எதுவும் எடுக்காமலும் (0 ரன்) அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
பின்னர் களமிறங்கிய டெண்ட்ரா , தீப்தி சர்மாவுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் உ.பி. வாரியர்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. டெண்ட்ரா 40 ரன்னிலும், தீப்தி 45 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பெங்களூரு தரப்பில் அந்த அணியின் சரங்கா , நடினி டி கிலெர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் பெங்களூரு களமிறங்கி விளையாடி வருகிறது.






