

சிட்னி,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளும் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 5 ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் டிராவிஸ் ஹெட்-க்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து அவர் 7 நாட்களுக்கு மெல்போனில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் அவர் 5 ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாது. இந்த நிலையில் டிராவிஸ் ஹெட்-க்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா சேர்க்கப்பட்டுள்ளார். 2010-2011 ஆஷஸ் தொடரில் அறிமுகமாகிய இவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஆஷஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்று இருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் இவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார்.