இந்திய அணியில் இணைந்த வருண் சக்கரவர்த்தி

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவாரா என எதிர்பார்க்கப்ட்டது.
இந்திய அணியில் இணைந்த வருண் சக்கரவர்த்தி
Published on
Updated on

லண்டன்,

அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டி20 தொடரை 2-0 என இழந்தது. அயர்லாந்து இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை வென்று புதிய வரலாறு படைத்தது. காயம் காரணமாக இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி விளையாடவில்லை. இது பின்னடைவாக அமைந்தது. அடுத்து இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டி20 போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவாரா என எதிர்பார்க்கப்ட்டது. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வருண் சக்கரவர்த்தி விளையாடுவது உறுதியாகியுள்ளது. அவர் இந்திய அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com