வருண் சக்கரவர்த்தியா? குல்திப் யாதவா? யார் அணியில் இடம் பெறுவார்...பதிலளித்த சூர்யகுமார் யாதவ்

இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்

வருண் சக்கரவர்த்தியா? குல்திப் யாதவா? யார் அணியில் இடம் பெறுவார்...பதிலளித்த சூர்யகுமார் யாதவ்
Published on

மும்பை,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, அமெரிக்காவை எதிக்ற்கொள்கிறது.

நாளை டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கும் நிலையில், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது,

சிறந்த பந்து வீச்சாளர்களை பெற்றிருப்பது கூடுதல் நன்மை. நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் அல்லது இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களுடன் விளையாடுவது அவசியம் என்றால், அவர்கள் இருவரும் அணியில் விளையாடுவார்கள்.

ஆனால், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் போன்ற உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் இருவரைக் கொண்டிருப்பது எப்போதுமே நல்லது. ஆனால் யாரை தேர்வு செய்வது என்பதில் தலைவலி ஏற்படும். இவ்வாறு சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com