

லண்டன்
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். இவர் மீது இரண்டு வீரர்கள் இனவெறி குற்றச்சாட்டுகளை சுமத்தியத்தி உள்ளனர். இதையடுத்து பிபிசி நிகழ்ச்சியில் இருந்து வாகன் நீக்கப்பட்டுள்ளார்.
வாகன் பிபிசி 5 லைவ் இன் 'தி டபர்ஸ் அண்ட் வாகன் கிரிக்கெட் ஷோ'வில் 12 ஆண்டுகளாக டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
ஆனால் 2009 ஆம் ஆண்டு யார்க்சையர் போட்டிக்கு முன்னர் வாகன் தனக்கும் மற்ற வீரர்களுக்கும் எதிராக இனவெறிக் கருத்துக்களை தெரிவித்ததாக அஸீம் ரபீக்கின் இனவெறி குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நீக்கப்பட்டு உள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன வார்த்தைகளை நினைவுபடுத்தும் எவரும் தவறு செய்யக்கூடியவர்கள், ஆனால் அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். ரபிக் அந்த நேரத்தில் தன்னை வருத்தப்படுத்த ஏதாவது சொல்லப்பட்டதாக நம்பினால், அதைத்தான் அவர் நம்புகிறார் என வாகன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.