

சென்னை,
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றி குறித்து குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது;
இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது ஒரு சிறப்பான ஆட்டம். கடைசி நான்கு அல்லது ஐந்து ஓவர் பீல்டிங்கைத் தவிர, களத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். உண்மையில், இந்த ஆடுகளத்தில் முதலில் பந்துவீசுவதா அல்லது முதலில் பேட் செய்வதா என்பதில் எனக்குச் சற்று குழப்பமாக இருந்தது. ஆனால் பவர்பிளேயில் நாங்கள் நன்றாகப் பந்துவீசினோம் என்று நினைக்கிறேன்
மொத்தத்தில், பந்துவீச்சில் நாங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டோம் என்றே நான் கருதுகிறேன். சாய் சுதர்சன் அற்புதமாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் களத்தில் அதிக நேரம் இருப்பது எப்போதும் முக்கியமான விஷயம். ஒருமுறை அவர் களத்தில் நிலைத்துவிட்டால், குறைந்தபட்ச ரிஸ்க்கில் அதிகபட்ச பலனைத் தரக்கூடிய ஒரு வீரர். அதுவே அவருடைய பலம்.”
இவ்வாறு அவர் கூறினார்.